Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
George / 2016 ஜூலை 05 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவகார்த்திகேயன் - நயன்தாரா ஆகியோர் நடிக்கவுள்ள புதிய திரைபடத்தின் தலைப்பை இயக்குநர் மோகன்ராஜா, இன்று வெளியிடவுள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், மான்கராத்தே போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்த அனிருத், தற்போது ரெமோ திரைப்படத்துக்கும் இசையமைத்துள்ளார்.
தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படத்திலும் இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார்.
வேதாளம் திரைப்படத்துக்குப் பிறகு தனது மார்க்கெட் மந்தமாகியிருப்பதால் இந்த திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து மீண்டும் பரபரப்பான இசையமைப்பாளராகிவிட வேண்டும் என்று ரெமோவுக்காக அதிகமாக மெனக்கெட்டுள்ளார் அனிருத்.
அத்துடன், சிவகார்த்திகேயன்-நயன்தாரா ஆகிய இருவருக்கும் முந்தைய திரைப்படங்களில் கொடுத்ததை விடவும் மோகன்ராஜா இயக்கும் புதிய திரைப்படத்தில் இன்னும் அதிரடியான பாடல்களை கொடுக்கப்போகிறாராம் அனிருத்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago