S.Renuka / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
டேட்டிங் என்ற பெயரில் தன்னை ஒரு நடிகர் ஏமாற்றி விட்டதாக தமிழில் படங்களில் நடித்த நடிகை பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
'மயோக்கம்' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம், நடிகையாக அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். அதன் பின்னர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துப் பிரபலமானவர் 'சிவப்பதிகாரம்' படத்தின் மூலம், தமிழில் எண்ட்ரீ கொடுத்தார். கதாநாயகியாக மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

இப்படி திரைத்துறையில் ஆல் ரவுண்டராக ஜொலித்து வந்த நடிகைக்குப் புற்றுநோய் பாதிப்பு ஒரு பேரிடியாக விழுந்தது. 2009இல், மம்தாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சை பெற்றுக் குணமடைந்த பிறகு சினிமாவில் அடியெடுத்து வைக்க, 2013இல் மீண்டும் அதே புற்றுநோய் அவரை வாட்டி வதைத்தது.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை சுஹாசினி மணிரத்னம் நடத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பல விடயங்களைக் கூறி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். குறிப்பாக காதல் மற்றும் டேட்டிங்கில் தனது கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
மலையாள நடிகர் ஒருவரை, தற்போது பெரிய சிக்கலில் சிக்க வைத்துள்ளது. புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு ஒரு சாதாரண வாழ்க்கையை அனுபவிக்க விரும்பியபோது, ஒரு பிரபல மலையாள நடிகர் தன்னை டேட்டிங் செல்ல அழைத்ததாக நடிகை மம்தா கூறினார்.

தனது குடும்பத்தினரின் அனுமதியுடன் அந்த நட்பைத் தொடர்ந்ததாகவும், ஆனால், அந்த நடிகருக்கு ஏற்கெனவே வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை மறைத்து தன்னிடம் பழகி வந்ததாகவும் கூறி, வருத்தம் தெரிவித்துள்ளார். நம்பிக்கை துரோகம் தன்னை மனரீதியாகப் பாதித்ததாகவும் கண்ணீருடன் மம்தா வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.
தற்போது "அந்த மலையாள நடிகர் யார்? அவர் செய்த குற்றத்திற்குக் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்காதது ஏன்?" உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை நெட்டிசன்கள் முன்வைத்துள்ளனர்.

கேரள திரைத்துறையில் பெண் பிரபலங்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றச்சம்பவங்கள் ஏற்கெனவே பல்வேறு பிரளயங்களை உண்டாக்கி இருக்கும் சூழல், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகையைத் திட்டமிட்டு ஒரு நடிகர் ஏமாற்றியிருப்பது தற்போது வெளியாகி அம்மாநில ரசிகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago