Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2022 மே 30 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படம் ஜுன் 3ஆம் திகதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
பொதுவாக வெளிநாடுகளுக்கு ஒரு திரைப்படத்தின் பிரதியை இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னரே அனுப்பிவிடுவார்கள். ஆனால், திரைப்படத்தின் இசை வேலைகளை இசையமைப்பாளர் அனிருத் இன்னும் முடிக்கவில்லையாம். அதை வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
ஒரு திரைப்படத்தின் பின்னணி இசை என்பது உயிரோட்டமாக அமைய வேண்டும். இசையமைப்பளார் பின்னணி இசையை அமைத்ததும், அது காட்சிகளுக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறதா என இயக்குநர் பார்க்க வேண்டும்.
தன்னுடைய இசையை இயக்குநர்கள் திருத்தம் செய்வதை அனிருத் விரும்பவில்லையாம். பட வெளியீடு வரை பின்னணி இசை அமைத்தால் கால நெருக்கடியின் காரணமாக இசையில் இயக்குநர்கள் எந்தத் திருத்தத்தையும் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும் அதை உடனடியாக செய்து முடிக்க முடியாது. எனவேதான் அனிருத் இப்படி கடைசி நேரம் வரை இழுத்தடிப்பதாகச் சொல்கிறார்கள்.
பின்னணி இசை தாமதம் ஆவதில் கமல்ஹாசனும் டென்ஷனாகவே உள்ளாராம். திரைப்படத்தின் பிரமோஷனுக்காக வெளியூர்களில் சுற்றிக் கொண்டிருப்பவர், அடிக்கடி இது பற்றிய அப்டேட் கேட்பதால் படக்குழுவினரும் டென்ஷனாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago