Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஏப்ரல் 18 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். இது தொடர்பாக க்ரித்தியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுமுகம் புச்சி பாபு சனா இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான உப்பேனா தெலுங்கு படத்தின் ஹீரோயின் தான் இந்த க்ரித்தி ஷெட்டி. உப்பேனா படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
17 வயதே ஆகும் க்ரித்தி ஷெட்டிக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. தன் கெரியர் பிக்கப் ஆவதை புரிந்து கொண்ட க்ரித்தி சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. க்ரித்தி ஷெட்டி தனுஷுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்கிற தகவல் அறிந்த தமிழ் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தனுஷ் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிறகு கார்த்திக் நரேன் இயக்கி வரும் டி43 படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்வார் என நம்பப்படுகின்றது.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago