2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

திருமண புகைப்படம்! சமந்தாவின் பாராட்டு

Freelancer   / 2023 ஒக்டோபர் 17 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்கு படங்கள் மட்டுமின்றி ஹிந்தி வெப் சீரியல்களிலும் நடித்துள்ள சமந்தா, விஜயதேவர கொண்டாவுடன் நடித்த குஷி படத்துக்கு பிறகு இன்னும் எந்த புதிய படத்தில் நடிக்கவில்லை.

குஷி படத்துக்கு பிறகு நடிப்புக்கு ஒரு சிறிய பிரேக் கொடுத்து விட்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருந்த சமந்தா தற்போது மயோசிட்டீஸ் நோய்க்கான சிகிச்சையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தாவிடத்தில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

உங்களைத் திருமணம் செய்தது போல ஒருவர், புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டு உள்ளாரே. அது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.

அதன்போது, குறித்த நபர் காட்டிய புகைப்படத்தை  வாங்கி பார்த்த சமந்தா, நிறைய நேரம் செலவழித்து என்னுடைய புகைப்படத்துடன், அவரது புகைப்படத்தையும் இணைத்து இந்த டிசைன் செய்துள்ளார். அந்த ரசிகரின் முயற்சியை நான் பாராட்டுகிறேன் என்று கூறியிருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X