Editorial / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய சினிமா வரலாற்றில் இரண்டு பாகங்களும் தலா 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த முதல் திரைப்படம் என்ற பெருமையை 'துரந்தர்' (Dhurandhar) 1 மற்றும் 2 ஆகிய பாகங்கள் பெற்றுள்ளன.
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான அதிரடி ஸ்பை த்ரில்லர் (Spy Thriller) திரைப்படமான 'துரந்தர் 2', முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பிற்குள் ஊடுருவி அவர்களை வேட்டையாடுவதை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இத்திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சமூக வலைத்தளத்தில் தனது விமர்சனத்தைப் பகிர்ந்துள்ளார்.
கோலி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
"'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்' படத்தைப் பார்த்தேன். இந்தியாவில் இதுபோன்ற ஒரு சினிமா அனுபவத்தை நான் இதுவரை கண்டதே இல்லை. இந்தப் படம் அனைத்து உணர்வுகளையும் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியது. சுமார் 4 மணிநேரம் ஒரு கணமும் கவனம் சிதறாமல் படத்தைப் பார்த்தேன்.
இயக்குநர் ஆதித்யா தார், உங்கள் திறமையும் அர்ப்பணிப்பும் இந்தப் படைப்பில் தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் ஒரு மேதை (Genius), உங்களுக்கு எனது வாழ்த்துகள்! படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாகப் பரிணமித்திருந்தாலும், ரன்வீர் சிங்... இந்தப் படத்திற்குப் பிறகு நீங்கள் திரையுலகில் முற்றிலும் வேறொரு உச்சத்தை அடைந்துள்ளீர்கள். உங்கள் நடிப்பு மிகச்சிறப்பானது. உண்மையிலேயே 'வாவ்' (Wow) ரகமான அனுபவம்!"
15 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
3 hours ago