Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 நவம்பர் 20 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகையொருவர் தனது ஆடைகளை முழுமையாக களைந்து நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பன்னி வாசு தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி துணை நடிகை சுனிதா போயா என்பவரே நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் பன்னி வாசு கீதா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பன்னி வாசு பல ஹிட் படங்களை தயாரித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராகவும் இருக்கும் பன்னி வாசு பிரபல விநியோகஸ்தர்களில் ஒருவராகவும் உள்ளார்.
தன்னை ஏமாற்றிய பன்னி வாசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவரது தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் துணை நடிகை திடீரென நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது தனது ஆடைகளை களைந்து நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனக்கு நீதி வேண்டும் என்று கூறியபடி இப்படி போராட்டத்தில் அமர்ந்தார்.
இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பொலிஸார் அங்கிருந்து அழைத்து சென்றனர். சுனிதா போயாவை உடைகளை உடுத்த வைத்த பெண் பொலிஸார, தயாரிப்பாளர் பன்னி வாசு ஐதராபாத் வருகை தந்ததும் அவரிடம் இது குறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.
தயாரிப்பாளர் பன்னி வாசுவிற்கு எதிராக சுனிதா போயா போராட்டம் நடத்துவது இது முதல் முறையல்ல.ஏற்கெனவே பலமுறை இப்படி தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி போராட்டம் நடத்தியிருக்கிறார். கடந்த மே மாதம் இதே அலுவலகம் முன்பாக அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு சுனிதா பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
அப்போது புகார் அளித்திருந்தும் பன்னி வாசு மீது பொலிஸார் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறி தான் தற்போது மீண்டும் சுனிதா போயா போராட்டம் நடத்தியுள்ளார். அவரது தொல்லை தாங்க முடியாமல் நான் 4 முறை ஆஸ்பத்திரிக்கு சென்றதாகவும் சுனிதா போயா கூறியுள்ளார்.
10 minute ago
42 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
42 minute ago
44 minute ago