Mayu / 2024 நவம்பர் 07 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானில் நடைபெற்ற நடிகர் நெப்போலியன் மகனின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக கலக்கியவர் தான் நடிகர் நெப்போலியன். அவரின் மூத்த மகன்- தனுஷுக்கு தசைப் பிடிப்பு சம்பந்தமான அரிய வகை பாதிப்பு இருப்பதால் அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறியதுடன் அங்கு பல்வேறு நிறுவனங்களை அவர் நடத்தி வருகிறார்.

அதன்படி, தற்போது மகன் தனுஷுக்கும் இந்தியாவைச் சேர்ந்த அக்ஷயாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஜப்பானில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த திருமணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் எதற்குமே நெப்போலியன் பதிலளிக்கவில்லை.

இதனை தொடர்ந்து, அக்க்ஷயா- தனுஷ் தம்பதியினரின் திருமணம் ஜப்பானில் வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.

இவர்களின் திருமணத்தில் தென்னிந்திய பிரபலங்களான கலா மாஸ்டர், மீனா, ராதிகா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

10 minute ago
35 minute ago
41 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
35 minute ago
41 minute ago
57 minute ago