2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பிரபாஸை விரும்பும் காஜல்

Editorial   / 2019 ஒக்டோபர் 29 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் கமலுடன் இந்தியன் 2 படத்தில் 85 வயது பாட்டியாக துணிச்சலாக நடித்து வருகிறார். 

இந்தக் கதாபாத்திரம் தனக்கு நிச்சயம் நல்ல பேரை வாங்கித் தரும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார். சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருந்து வருகிறார் காஜல். 

விரைவில் அவருக்குத் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காஜல், 'விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகக்' கூறினார்.

மேலும், யாரை கொல்ல, யாரை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என காஜலிடம் லஷ்மி மஞ்சு கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், ராம் சரணை கொல்ல விரும்புகிறேன். பிரபாஸை மணக்க விரும்புகிறேன் எனப் பதிலளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X