Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 18 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோலிவூட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவுக்கு, எவ்வளவு சம்பளமேனும் கொடுக்க, தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தயாராக உள்ளனர். அதனால், தற்போது கோலிவூட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக, நயன்தாரா தான் இருக்கிறார்.
ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவருக்கு, கதாபாத்திரத்தில் மட்டுமல்ல, சம்பள விடயத்திலும், ஹீரோக்களை விட அதிகமாக வாங்க வேண்டும் என்பதே அவரது ஆசையாம்.
நயன்தாரா தற்போது, ஒரு திரைப்படத்துக்காக 50 மில்லியன் இந்திய ரூபாயை, சம்பளமாக வாக்குகிறாராம். இதுவே, ஒரு திரைப்படத்துக்கு 500 மில்லியன் இந்திய ரூபாயைச் சம்பளமாக வாங்க வேண்டும் என்பது தான் அவரது நீண்ட நாள் ஆசையாம்.
நயன்தாரா தற்போது, தளபதி 63 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 10 ஆண்டுகள் கடந்த நிலையில், விஜய்யுடன் அவர் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். இதில் அவருக்கு, கனமாக கதாபாத்திரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .