Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 26 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ள நடிகை காயத்ரி ரகுராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்து மதம் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. திருமாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட காயத்ரி ரகுராம் அவரை பற்றி அவதூறான வார்த்தைகளை உபயோகித்தார்.
இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பலர் காயத்ரி வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தனக்கு திருமா கட்சியை சேர்ந்த சிலர் அவதூறான வார்த்தைகளால் திட்டுவதாக காயத்ரி ட்விட்டரில் பதிவிட்டார்.
மேலும் இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு தான் பயப்படப் போவதில்லை எனவும், இந்து மதம் குறித்து விவாதிக்க விரும்பினால் நேரில் தன்னை சந்திக்கலாம் என்றும் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து அவரது ட்விட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. கணக்கு முடக்கத்திற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை.
இந்த நிலையில் தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்த காயத்ரி ரகுராம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
10 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago