2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

புதுத் தோழி

George   / 2015 டிசெம்பர் 07 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமி மாதிரி ஒரு நல்ல தோழியை பார்க்க முடியாது. தங்கமகன் திரைப்படத்தில் அவருடன் நடித்தபோதுதான் அதை நான் உணர்ந்தேன். அதனால் இப்போது எனது உயிர்த்தோழியாகி விட்டார்  என எமிஜெக்சனை  புகழ்ந்து தள்ளி வருகிறார் நடிகை சமந்தா.

மதராசப்பட்டினம், ஐ திரைப்படங்களில் நடித்து விட்டு தற்போது தங்கமகன், தெறி திரைப்படங்களில் நடித்து வருகிறார் எமிஜெக்சன். இதையடுத்து ஷங்கர் இயக்கும் எந்திரன்-2 திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளார். 

தமிழ் சினிமாவுக்கு வந்து குறுகிய காலத்திலேயே ஷங்கர் இயக்கத்தில் இரண்டாவது திரைப்படத்தில் நடிக்கும் எமி, ரஜினிக்கும் ஜோடியாகப்போகிறார். 

அனுஷ்கா, த்ரிஷா, தமன்னா, சமந்தா என எந்த நடிகைக்கும் கிடைக்காத அரியா வாய்ப்புகள் எமிஜாக்சனுக்கு கிடைத்து வருகிறன.

இந்த நிலையில் தங்கமகன், தெறி ஆகிய திரைப்படங்களில் சமந்தாவுடன் இணைந்து நடித்து வரும் எமியை தனது போட்டி நடிகையாக நினைக்காத சமந்தா அவரை புகழ்ந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X