Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 06 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
'வி ஹவுஸ் புரொடக்க்ஷன்ஸ்' சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்க சிம்பு நடிக்கும் மாநாடு படம் தொடங்கப்பட உள்ளதாக 2018 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் படப்பிடிப்பு தொடங்குவதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பலமுறை திட்டமிட்டு ஏற்பாடு செய்தாலும் கதாநாயகன் சிம்பு அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட படம் கைவிடப்படலாம் என்ற செய்திகள் அதிகமாக வந்து கொண்டிருந்தன.
ஒரு கட்டத்தில் பிரச்சினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சிம்பு தரப்பில் அவரது அம்மா உஷா ராஜேந்தர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சிம்பு நடிக்க தயாராக இருப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
அதன் பின்னரும் படப்பிடிப்புக்கு சிம்பு வராத காரணத்தால் மூன்று மாதங்களுக்கு முன்பு மாநாடு படம் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிரங்கமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு போட்டியாக சிம்பு தரப்பில் மகா மாநாடு எனும் பெயரில்125 கோடி ரூபாய் செலவில் படம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்போது இரண்டு தரப்பிலும் அறிவிக்கப்பட்ட செய்திகள் பொய்யாகிப் போய் மீண்டும் சிம்பு நடிக்க மாநாடு படம் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக சுரேஷ் காமாட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநாடு படத்திற்கான கால்ஷீட் திகதி எந்தவிதமான இடையூறும் இல்லாமல் தருவதாக உத்தரவாதம் அளிக்கும் ஒப்பந்தம் ஒன்று படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் கதாநாயகன் சிம்பு இடையே போடப்பட்ட பின்னர், மாநாடு படம் தொடங்கப்படும் என்று சுரேஷ் காமாட்சி தரப்பில் கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும், சிம்புவுக்கும் நேரடியான இதுபோன்ற ஒப்பந்தம் எதுவும் இல்லை என்பதுடன் படத்தை எந்த விதமான தடையும் இன்றி முடித்துக் கொடுப்பதற்கு இயக்குனர் வெங்கட்பிரபு பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago