George / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபு சாலமன் இயக்கும் திரைப்படத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் தனுஷ், அதனையடுத்து. துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். அரசியல் திரில்லராக உருவாகவிருக்கும் இதில், தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
அண்ணன், தம்பியாக நடிக்கும் தனுஷ், இதில் ஒரு கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அண்ணன் அரசியல்வாதியாகவும், தம்பி எதைப்பற்றியும் கவலைப்படாத ரௌடியாகவும் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷூக்கு ஜோடியாக ஷாமிலி ஒப்பந்தமாகியுள்ளார். அண்ணன் தனுஷூக்கு ஜோடியாக நடிக்க லட்சுமிமேனனை அணுகியுள்ளனர். ஆனால், அவர் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை இந்த மாதத்திலஆரம்பித்து டிசெம்பர் மாத இறுதியில் முடித்துவிட முடிவு செய்துள்ளனர். இதுதவிர, வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை திரைப்படத்திலும் தனுஷ், நடிக்க ஒப்பந்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
12 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
16 minute ago