Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் இறுதி போட்டிக்கு தெரிவாகும் டாஸ்க்குகள் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய டாஸ்க்கில் லொஸ்லியாவுக்கு காயம் ஏற்படுகிறது.
ஒவ்வொரு போட்டியாளரும் முதுகில் தெர்மாகோல் பந்துகளை சுமந்து கொண்டு வட்டத்தை சுற்றி வரும் நிலையில் சக போட்டியாளர்களின் தெர்மாகோல் பந்துகளை ஓடிக்கொண்டே வெளியேற்ற வேண்டும்.
ஒவ்வொருவரும் மற்றவர்களின் தெர்மோகோல் பந்துகளை ஓடிக்கொண்டே வெளியேற்றி வரும் நிலையில் சாண்டி, லொஸ்லியாவின் தெர்மோகோல் பந்துகளை வெளியேற்ற சாண்டி முயற்சிக்கும்போது லொஸ்லியா தடுமாறி கீழே விழுந்ததால் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் ஷெரின் கால்வலியால் அவதிப்பட அவருக்கு சேரன் கால்பிடித்து விடுகிறார்.
டாஸ்க் என்று வரும்போது போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் முழுத்திறமையை காண்பித்தாலும் ஒருவருக்கு காயம் என்றால் உடனே டாஸ்க்கை நிறுத்திவிட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து காயம் அடைந்தவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை இருப்பது இந்த சீசனின் பொசிட்டிவ் ஆக பார்க்கப்படுகிறது.
#Day87 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/3P8XciW5Dk
— Vijay Television (@vijaytelevision) September 18, 2019
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago