J.A. George / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.
8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜிகர்தண்டா 2 படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படத்தின் டீசர் இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.
இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
8 hours ago
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Mar 2026