George / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளையதளபதி விஜய் நடித்துவரும் “பைரவா” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ள நிலையில், அடுத்து அவர் அட்லியின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்தத் தகவலை தற்போது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹேமாருக்மணி, உறுதி செய்துள்ளார். பத்திரிகையாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,
“எங்களுடைய பேனரில் பெரிய ஹீரோவை வைத்து திரைப்படமெடுப்பது இதுதான் முதல்முறை. இதனால், எங்கள் நிறுவனம் பெருமை அடைகிறது. மேலும் அட்லி-விஜய்யின் கூட்டணி இதுவரை பிரம்மாதமாக வந்துள்ளது. அதனால், மீண்டும் அதே அற்புதம் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறியுள்ளார்.
ஹேமா ருக்மணியின் இந்தப் பேட்டியை அடுத்து, விஜய்-அட்லி திரைப்படம் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த திரைப்படத்தின் நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25 minute ago
36 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
36 minute ago
43 minute ago
1 hours ago