Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
George / 2016 ஜூன் 26 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய்யுடன் நடித்த பல நடிகைகள் 'அவர் அமைதியானவர். யாரிடமும் அதிகமாக பேச மாட்டார். படப்பிடிப்பு தளங்களில் உடன் நடிப்பவர்கள் பேச்சுக் கொடுத்தால் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசுவார். இல்லையேல் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு முடித்துக்கொள்வார்' என்றுதான் கூறி வந்தனர்.
ஆனால் விஜய்யின் 60ஆவது திரைப்படத்தில் ஜோடி சேர்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷ், 'விஜய் ரொம்ப கலகலப்பானவர். படப்பிடிப்பு தளத்தில் கொமடியாக ஏதாவது பேசிக் கொண்டேயிருப்பார்' என்கிறார்.
'எனது ஹீரோக்களில் விஜய், சிவகார்த்திகேயன் இரண்டு பேருமே முக்கியமானவர்கள். இவர்களில் சிவகார்த்திகேயன் பெரிய கலாட்டா பேர்வழி. அவரும், சூரியும் சேர்ந்து விட்டால் என்னை கலாய்த்துக்கொண்டேயிருப்பார்கள்.
அதனால், அவர்கள் ஏதாவது பிளான் போடுகிறார்கள் என்று தெரிந்தால் அந்த பக்கமே நான் போக மாட்டேன். அது மட்டுமின்றி அவர்கள் என்னை கலாய்த்தால் நானும் பதிலுக்கு கலாய்ப்பேன்.
ஆனால், விஜய் அப்படியல்ல. கலாய்க்க மாட்டார், மென்மையாக பேசுவார். அதேசமயம், மற்றவர்களெல்லாம் சொல்கிற மாதிரி அவர் மூடி டைப் இல்லை. ரொம்ப ஜொலி டைப். தன்னை சுற்றியிருப்பவர்களிடம் சகஜமாக பழகுவார்.
அதோடு, ஓய்வாக இருக்கும் நாட்களில் கிரிக்கெட், பெட்மிண்டன் - என ஏதாவது விளையாடுவார். அதில் திரைப்படக்குழுவில் உள்ளவர்களையும் சேர்த்துக்கொள்வார் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
3 hours ago