Editorial / 2020 ஜூன் 19 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமிதாப்பச்சன் நடித்த ஹிந்தி திரைப்படமான 'பின்க்', தமிழில் அஜித்குமார் நடிக்க 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் கடந்த வருடம் வெளியானது.
இந்த நிலையில், தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க 'வக்கீல் சாப்' ஆக ரீமேக்காகி வருகிறது.
தமிழில் அஜித் மனைவியாக வித்யா பாலன் நடித்த நிலையில், தெலுங்கில் பவன் கல்யாண் மனைவியாக நடிக்கும் நடிகை தெரிவு கடந்த சில மாதங்களாகவே நடந்து வருகிறது.
சிறிது நேரமே இடம் பெறும் கதாபாத்திரத்தில் நடிக்க சில முன்னணி நடிகைகள் தயங்குகிறார்கள்.
இந்த நிலையில், நடிகை ஸ்ருதிஹாசனை நேரில் சந்தித்து படத் தயாரிப்பாளரும், இயக்குநரும் நடிக்கக் கேட்டுக் கொண்டார்களாம். ஆனால், அவர் நடிக்க விருப்பமில்லை என சொல்லிவிட்டாராம்.
அதே சமயம் பவன் கல்யாண் நடிக்க உள்ள மற்றுமொரு திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .