2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

தந்தையே மகனாக பிறந்துள்ளார் ; சிவகார்திகேயன்

Freelancer   / 2021 ஜூலை 13 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தி ஒன்றை  பதிவிட்டுள்ளார் .

முன்னணி நடிகரான சிவகார்திகேயன் பல மேடைகளில் தனது வெற்றிகளை காண தந்தை அருகில் இல்லை என பலமுறை கண்கலங்கியுள்ளார்.

தற்போது அக்குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம் தந்தையே தனக்கு மகனாக பிறந்துள்ளதாக  கூறி நெகிழ்ச்சியில் உள்ளார்.

"18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக, என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி" அம்மாவும் குழந்தையும் நலம் என தெரிவித்துள்ளார்.

இவருக்கு ஆராதனா என்கிற மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

M


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .