2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

இந்தியாவுக்கு வரவுள்ள ’மணி ஹெய்ஸ்ட்’ குழுவினர்

J.A. George   / 2021 டிசெம்பர் 07 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் முழுவதும் பெரும்பாலானவர்களால் விருப்பத்துடன் பார்க்கப்படும் ‘மணி ஹெய்ஸ்ட்’ என்ற  வெப் தொடரின் ஐந்தாவது சீசனின் இரண்டாம் பாகம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

உலகம் முழுவதும் இந்த தொடர் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றாலும் இந்தியாவில் தான் மிக அதிக பார்வையாளர்கள் இத்தொடருக்கு உள்ளனர்.

இதனை அடுத்து இந்தியாவுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் நன்றி கூறிய ‘மணி ஹெய்ஸ்ட்’ குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் இந்த தொடரின் முக்கிய கேரக்டரில் நடித்த ஹெலன்ஸ்கி, ‘கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்தவுடன் நான் இந்தியாவுக்கு வருகிறேன். குறிப்பாக கோவாவுக்கு வர வேண்டும் என்று எனக்கு ஆசை’என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .