2021 ஜூலை 28, புதன்கிழமை

முகம் வீங்கிப் போன ரைசா

Editorial   / 2021 ஏப்ரல் 18 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகை ரைசா வில்சனின் முகம் வீங்கிய நிலையிலான புகைப்படம் ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.

வேலையில்லா பட்டதாரி, பியார் பிரேமா காதல் போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது முகம் வீக்கத்துக்கான காரணத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் முகத்தில் பேசியல் செய்வதற்காக அழகுக் கலை நிபுணர் ஒருவரிடம் சென்றதாகவும் இதன்போது, தேவையற்ற சில ஒப்பனைகள் அவரால் செய்யப்பட்டதால் தனது முகம் வீக்கமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து சம்பந்தப்பட்ட நபருடன் பேசுவதற்கு முயற்சி செய்த போதிலும் அவர் தன்னை சந்திப்பதை தவிர்த்து வருவதாகவும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .