2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

காதலனின் நிர்வாண புகைப்படத்தை வெளியாக்கிய பிரபல நடிகை

Janu   / 2023 மே 31 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரெயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பிரபலமானவர் ஆவார்..

50 வயதாகும் இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்கிற மகனும் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அர்பாஸ் கானை விவாகரத்து செய்து பிரிந்தார் மலைக்கா அரோரா.

மலைக்கா அரோராவும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மகன் அர்ஜுன் கபூரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். மலைக்கா அரோரா,  அர்ஜுன் கபூர் படுக்கையில் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். மலைக்கா அதற்கு "எனது சொந்த சோம்பேறி பையன்," என தலைப்பிட்டு இருந்தார்.

சிறிது நேரத்தில் அந்த புகைப்படம் வைரலாக பரவி நெட்டிசன்களின் வரவேற்பை பெற்றது. மலைக்காவும் -அர்ஜுனும் கடந்த பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இருவரும் தங்கள் உறவைப் பகிரங்கப்படுத்தினர். அவர்களுக்கு இடையே 12 வயது இடைவெளி காரணமாக விமர்சிக்கபட்டனர். இருந்தும் மலைக்காவும் அர்ஜுனும் சமூக ஊடகங்களில் ஒருவருக்கொருவர் அன்பைப் பொழிவதில் தவறவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .