2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர்..

Freelancer   / 2022 ஜூலை 05 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பெரிய வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏகப்பட்ட திரையுலக நட்சத்திரங்கள் ஒன்றாக நடித்துள்ள இப்படத்தை ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்துள்ளனர்.

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகமான PS-1 திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் முக்கிய அப்டேட்ஸ் வெளியாகி வருகிறது.

அதன்படி தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் நடிகர்கள் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி வருகிறது. மேலும் நேற்று அதித்ய கரிகாலனாக விக்ரமின் புதிய போஸ்டரை வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் தற்போது வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தியின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .