2022 ஜூலை 04, திங்கட்கிழமை

ஹாலிவுட் லெவலுக்கு கிளாமரில் இறங்கிய சின்னத்திரை நடிகை..

Freelancer   / 2022 மே 26 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'ஜில்லா' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரவீனா தாஹா, தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ராட்சசன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து சின்னத்திரையில் சீரியலில் கதை கலக்கி வரும் இவ்வாறு கதை சொல்ல போறோம்,  தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வந்த ரவீனா தற்பொழுது விஜய் டிவியில் மௌனராகம் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
 
 

சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்த ரவீனா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறுகிறார்.

இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்நிலையில், பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி உடையில் விறுவிறுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து உள்ளார் நடிகை ரவீனா.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .