Ilango Bharathy / 2021 ஜூன் 13 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் கடந்த 2013 ஆண்டு வெளியாகி வசூல் குவித்த திரைப்படம் திரிஷ்யம். இத் திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது.

இதில் கமல்ஹாசன், கௌதமி கலாபவன் மணி, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2ஆம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அந்தவகையில் இத் திரைப்படமும் தமிழில் ‘பாபநாசம் 2-ம் பாகமாக உருவாக உள்ளதாகவும், இதில் நடிக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பேசப்படுகிறது.

மேலும் முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கவுதமி, இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக நடிகை மீனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசனும், நடிகை மீனாவும் ஏற்கனவே கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘அவ்வை சண்முகி’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4 minute ago
5 minute ago
14 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
5 minute ago
14 minute ago
33 minute ago