Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 மார்ச் 29 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பட வாய்ப்புகளுக்காக தங்களை அட்ஜெஸ்ட்மென்டுக்கு அழைப்பதாகவும் அழைத்ததாகவும் நடிகைகளே இதுவரையிலும் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இரவு வரச் சொல்லி டார்ச்சர் கொடுக்கும் பிரபல நடிக்கை ஒருவர், அட்ஜெஸ்ட்மென்டுக்கு தன்னை அழைத்ததாக நடிகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1992ம் ஆண்டு பீதாம்பரி எனும் படத்தில் அறிமுகமானவர் நடிகர் ரவி கிஷன். தெலுங்கு, தெரே நாம், டானு வெட்ஸ் மனு பாலிவுட் மற்றும் போஜிபுரி படங்களில் நடித்துள்ள இவர், தற்போது அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை ஏற்பட்டதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
மேலும், அப்படி செய்தது ஒரு பிரபல நடிகை என்றும் கூறியிருப்பது தான் திரைத்துறையையே ஷாக் ஆக்கி உள்ளது.
சினிமா நடிகைகள், சின்னத்திரை நடிகைகள் உள்ளிட்ட பலரும் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை வைத்து ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றனர். பெண்களுக்கு மட்டும் தான் சினிமாவில் இது போன்று பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் தொல்லைகள் இருப்பதாக பார்த்தால் நடிகர்களுக்கும் அதை விட மோசமாக சினிமா ஹீரோயின்களே டார்ச்சர் கொடுப்பதாக திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் ரவி கிஷன்.
ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆரம்ப காலக்கட்டத்தில் தேர்வான போது, எல்லாம் ஓகே ஆகி விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக போகிறது. அப்போது திடீரென அந்த பெண் பிரபலம் எனக்கு போன் பண்ணி நைட் காப்பி குடிக்க வறீங்களான்னு கேட்டார். பொதுவாகவே காபியை பகலில் தானே குடிக்க அழைப்பார்கள். அதுவும் சாதாரண நடிகர் என்னை இப்படி அந்த நடிகை அழைத்ததும் விஷயத்தை புரிந்து கொண்டு வேண்டாம் என மறுத்தேன்.
ஆனால், அந்த நடிகை விடாமல் என்னை டார்ச்சர் செய்தார். என் அப்பா என் கிட்ட குறுக்கு வழியில போய் எப்போதுமே சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம்பாதித்தால் அது நிலைக்காது எனக் கூறியது தான் நினைவுக்கு வந்தது. அந்த நடிகையின் இச்சைக்கு சம்மதிக்காத நிலையில், அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டேன். அப்போது தான் எல்லா விஷயமும் முழுமையாக எனக்கு புரிந்தது என்று கூறியுள்ளார்.
அந்த பெண் பிரபலம் யார் என்கிற கேள்வியை தொகுப்பாளர் திடீரென எழுப்ப, வேண்டாம் அவர் பெயர் சொல்ல விரும்பவில்லை. இப்போ அவர் மிகப்பெரிய பிரபலம். நக்மாவுக்கும் எனக்கும் காதல் என்று பேசினர். நாங்கள் படங்களில் தொடர்ந்து நடித்ததால் அப்படி கூறினர். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதற்கு முன்பே எனக்கு திருமணம் ஆகி விட்டது' என ரவி கிஷன் கூறினார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago