2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

ஆர்.ஜேவின் ஆசை

J.A. George   / 2023 ஜனவரி 31 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 'ரன் பேபி ரன்' படத்தில் நடித்து இருக்கிறார்.

இப்படம் குறித்து அவர் கூறும்போது. ''எனது முதல் படத்தில் அரசியலும், 2-வது படத்தில் ஆன்மிகமும் இருந்தது. ரன் பேபி ரன் திரில்லர் படமாக தயாராகி உள்ளது.

ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கும் ரன் பேபி ரன் வேறு களம். இந்த படம் இருக்கை நுனியில் அமர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி உள்ளது. சிவகார்த்திகேயன், சந்தானம் என்று யாரையும் போட்டியாக நினைக்கவில்லை.

நான் படங்களில் நடிப்பது அதிர்ஷ்டம். எனக்கு நீண்ட தூரம் ஓடவேண்டும். எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பேன். புதிதாக சிங்கப்பூர் சலூன் உள்பட 3 படங்களில் நடிக்கிறேன்.

ஊரடங்கில் எல்லோரும் திரில்லர் படம் பார்த்து பழகி விட்டனர். அதனால் இப்போது விதவிதமான திரில்லர் படங்கள் வருகின்றன. மைக்கேல் மதன காமராஜன் மாதிரி ஒரு படத்தில் நடிக்க ஆசை உள்ளது" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X