Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
George / 2016 ஜூலை 06 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேதாளம் திரைப்படத்துக்குப் பிறகு அஜீத், தன்னுடைய காலில் ஏற்பட்ட வலியால் அதற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 3 மாத காலம் ஓய்வெடுக்கச் சொல்லி வைத்தியர்கள் வலியுறுத்தியதால் எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளாமல் வீட்டிலேயே தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார்.
இதற்கிடையில், தனது அடுத்த திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை மறுபடியும் சிறுத்தை சிவாவுக்கே வழங்கியிருந்தார். அஜீத் ஓய்வில் இருக்கும்போதே கதை எழுதும் பணிகளில் சிவா மும்முரமாக வேலை பார்த்து வந்தார்.
இத்திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து இசையமைப்பாளராக அனிருத்தும் ஒப்பந்தமானார்.
அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்தாலும் திரைப்படம் எப்போது தொடங்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், இன்று பூஜையை நடத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பூஜையை அடுத்து படப்பிடிப்பு எப்போது தொடங்குவார்கள் என்பதை பிறகு அறிவிப்பார்கள் என தெரிகிறது. இத்திரைப்படம் அஜீத்துக்கு 57ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Vasanthkumar Sunday, 10 July 2016 05:59 AM
Thala all the best for 57 films best of luck
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
3 hours ago