Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 மே 25 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் வெளிவருவது என்பது வரலாற்றுச் சாதனையாக உள்ள இந்த காலத்தில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இதோ வரும், அதோ வரும் என இழுத்துக் கொண்டிருந்த இது நம்ம ஆளு கடைசியாக நாளை 27ஆம் திகதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாலு திரைப்படத்தை வாங்கி வெளியிட்டு நஷ்டமடைந்த சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர், இது நம்ம ஆளு திரைப்படத்தை வெளியிட தவியாய் தவித்துவிட்டார். திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் முதல் பிரதிக்காக செலவு செய்த தொகையையும் கொடுக்க முடியாமல், வாலு திரைப்படத்தில் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு நட்டத் தொகையையும் தர முடியாமல் திணறிவந்தார்.
ஒரு வழியாக, சில திரையுலகப் பிரமுகர்களின் உதவியோடு அனைவரையும் உட்கார வைத்து பேசி முடிவுக்கு வந்தார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 15 கோடி இந்திய ரூபாய் வியாபாரம் ஆகியுள்ள இது நம்ம ஆளு சுமார் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா திரைப்படம் ஜூலை 15ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago