Editorial / 2019 ஜூன் 16 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
2002இல், மணிரத்னம் இயக்கத்தில் உருவான “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்துக்குப் பின்னர், மாதவனும் சிம்ரனும், மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளனர்.
பதினேழு வருடங்களுக்குப் பின், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் த்ரில் வாழ்க்கை அப்படியே திரைப்படமாக்கப்பட்டு வருகிறது. அதில், நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் இயக்குநரும் மாதவனே. “தி ராக்கெட்டரி; நம்பி எஃபெக்ட்ஸ்” என்ற பெயரில் எடுக்கப்பட்டுவரும் இந்தத் திரைப்படத்தில், நடிகர் மாதவனும் நடிகை சிம்ரனும் மிகவும்சிரத்தை எடுத்து நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிம்ரனும் மாதவனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டு, செய்தி ஒன்றைப் பதிவிட்டிருக்கும் மாதவன், “கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்துக்குப் பின், நானும் சிம்ரனும் இணையும் திரைப்படம் “தி ராக்கெட்டரி”. வெகு காலத்துக்குப் பின், திருவும் இந்திராவும் ஜோடி சேர்ந்திருக்கிறோம்” எனக் கூறியிருக்கிறார்.
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago