2025 மே 21, புதன்கிழமை

நடிகர் விஷாலுக்கு தடா…!

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னணி நடிகர் என தனக்கு தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு திரியும் நடிகர் என திரையுலகில் கணிப்பிடப்படும் நடிகர் விஷாலின் படங்களுக்கு தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ஒத்துழைப்பு தரமாட்டாது என நேற்று புதன்கிழமை அறிவித்திருக்கிறது.

விநியோகஸ்தர்கள் விஷாலினை 'தம்பட்டம் அடிக்கும் கதாநாயகன்' என்று கூறினாலும் அவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றார்கள். விஷாலின் படங்களுக்கென்று தனி இடமிருப்பதும் யாவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு எதற்காக விஷாலின் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்திருக்கிறது என ஆராய்ந்து பார்த்தபோது... "நடிகர் விஷால் சம்பந்தப்பட்ட ஜி.கே.பிலிம்ஸ் கோப்பரேஷன், தமிழ்நாடு முழுவதும் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு தரவேண்டிய பாக்கி தொகையை பலமுறை கேட்டும் தரவில்லை. எனவே, பாக்கி தொகை தரும்வரை விஷால் நடித்த படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று முடிவு செய்து இருக்கிறோம்..." இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த அறிவிப்பினால் கடுப்பில் இருக்கிறாராம் விஷால்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .