2025 மே 21, புதன்கிழமை

படித்துக்கொண்டே நடிப்பேன்: நடிகை சுஹானி

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடிக்க வருகின்ற பல நடிகைகள் தங்களுடைய படிப்பை மறந்துவிடுகிறார்கள். ஒருசிலரைத் தவிர ஏனையவர்கள் படிப்பு என்றால் பதறுவதையே பார்த்திருக்கிறோம். ஆனால் இரண்டு பட்டப்படிப்புகளை ஒரே நேரத்தில் படித்துக்கொண்டே தமிழ் படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை என்றால் அவர் சுஹானிதான்.

'இரண்டு முகம்' படத்தில் சத்தியராஜ் - கரண் கூட்டணியில் கலக்கிக் கொண்டிருக்கும் சுஹானி, அடுத்து நடிக்கவிருக்கும் படம் 'அப்பாவி'. இப்படி அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தனது படிப்பில் பெரும் கவனம் எடுக்கின்றார் அவர். ஏற்கனவே பி.கொம் படித்துள்ள அவர் இப்பொழுது எம்.பி.ஏ. படிப்பதற்கு தயாராகிவருகிறார். அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு கற்கைநெறிகளை படிக்கப்போகிறாராம். சென்னையில் எம்.பி.ஏ. படிக்கின்ற அதேவேளை புனேயில் டிப்ளோமா கற்கைநெறியொன்றையும் தொடரவுள்ளாராம்.

ஒரேநேரத்தில் எப்படி படிப்பையும் நடிப்பையும் கவனித்துக் கொள்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டால் ‘அப்பாவி’யாக சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறார். ‘எனக்கு வருடத்தில் இரண்டு படங்கள்தான் இருக்கும். எந்த மாதமும் படப்பிடிப்பு இருக்காது. அந்த இடைவேளையில் நல்லபடியாக என்னால் கற்கமுடியும். எனக்கு படிப்பதற்கு ஒரு மாதம் போதும்…’ என்பதோடு மட்டுமல்லாமல் அதனை செயலிலும் செய்து காண்பிக்கிறார் சுஹானி.

ஒரு துறையினை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல் படிப்பில் கரைகாண நினைப்பது சந்தோஷமாக இருக்கிறதல்லவா? வாழ்க வளமுடன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .