Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆபாசமான குறுந்தகவல்களை தனக்கு அனுப்புவதாக கூறி பெங்களூரை சேர்ந்த ராகவேந்திராவை சிறைக்கு அனுப்பியவர் நடிகை சிநேகா. சிறைக்கு சென்ற ராகவேந்திரா 45 நாட்கள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்ததன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். பிணையில் வந்தபின்னர் தொடர்ந்தும் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சிநேகா மட்டும் விசாரணைக்கு சென்று கண்ணீர் வடித்து வந்தார். ஆனால் ராகவேந்திரா சரியாக விசாரணைகளுக்கு வருவதில்லையாம்.
இந்நிலையில் மீண்டும் ராகவேந்திரா மீது புகார் கொடுத்துள்ளார் சிநேகா. பிணையில் வெளியில் வந்திருக்கும் ராகவேந்திரா மீண்டும் தனக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்புவதாகவும் 'என்னைக்கெண்டாலும் நீதான் என்னுடைய பொண்டாட்டி' என்று தெரிவிப்பதாகவும் பொலிஸில் புகார் கொடுத்திருக்கிறார்.
குறிந்த அந்த குறுந்தகவல்கள் ராகவேந்திராவிடமிருந்து வந்தவைதானா என்ற விசாரணைகளை இப்பொழுது பொலிஸார் மேற்கொள்கின்றனராம். பெண்களின் கண்ணீருக்கு வலிமை அதிகம்தான், அதிலும் சிநேகாவின் கண்ணீர் என்றால் பொலிஸார் சும்மா இருப்பார்களா...?
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 May 2025
20 May 2025