Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்பாட்டமில்லாமல் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருக்கும் நடிகர் தனுஷின் அடுத்த படம் பற்றி செய்திகள் கசிந்திருக்கின்றன.
இயக்குநர் ஹரியுடன் இணைகின்றார் தனுஷ். இயக்குநர் ஹரி ஏற்கனவே ரஜனிகாந்தினை வைத்து படமொன்றினை இயக்கப்போகிறார் என கதை பரவியிருந்தது. ஆனால் அவருக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் ரஜனியின் மருமகன் தனுஷினை வைத்து 'வேங்கை' என்னும் படத்தினை இயக்குகிறார் ஹரி.
வேங்கை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்திற்கு முதலில் 'அருவா' என்று பெயர் வைத்திருந்தார்கள். இந்தப்பெயர் பற்றி விமர்சனங்கள் எழுந்ததால் 'வேங்கை' என இப்பொழுது பெயர் வைத்திருக்கிறார்கள்.
வேங்கை படத்தின் கதை பற்றி இயக்குநர் ஹரி குறிப்பிடுகையில்... 'கோபப்படுகிறவன் அரிவாள் எடுத்தால் தப்பு. காவல்காரன் அரிவாள் எடுத்தால் தப்பில்லை...' என்று ஒருவரியில் கதையினை கூறியிருக்கிறார். வேங்கை படத்தில் கோபக்கார கிராமத்து இளைஞனாக தனுஷ் நடிக்கிறாராம்.
karthik Friday, 18 February 2011 01:51 AM
சிவகங்கை படம் பட் சூப்பர் ஹிட்.
Reply : 0 0
v.NagarajGowtham Saturday, 30 April 2011 06:04 PM
எனக்கு தனுஷ் படம் எல்லாம் நல்ல படம் .நல்ல நடிகர் என் நண்பர் மாதிரி இருப்பதால் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் .
Reply : 0 0
revathi Sunday, 03 July 2011 08:06 PM
வேங்கை படம் ரொம்ப நல்ல இருக்கும்னு நினைக்கேன். காரணம், தனுஷ் ரொம்ப நல்ல நடிகர். ரொம்ப நல்ல நடிப்பார். பாடல் ரொம்ப சூப்பர் ஹிட்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 May 2025
20 May 2025