Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 நவம்பர் 23 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபுதேவாவின் இயக்கத்தில் வெளிவரவுள்ள புதிய படத்தில் விஷால் கதாநாயகனாக தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கான நடிகை ரேஸில் வெற்றியீட்டியிருப்பவர் வாரணம் ஆயிரம் புகழ் சமீரா ரெட்டி.
விஷாலுக்கு ஜோடி தேடுவதில் பிரபுதேவா தலையைப் பிய்த்துக்கொண்டிருந்த நிலையில் அதற்கான ரேஸில் இடம்பிடித்தவர்கள் ஹன்சிகா, அமலா பால், த்ரிஷா, தப்ஸீ, காஜல், அனுஷ்கா என்பவர்களாவர். இருப்பினும் அந்த ரேஸில் எதிர்பாராமல் வந்து முந்திக் கொண்டவர் சமீரா ரெட்டி.
ஜீ.கே பிலிம் கூட்டுத்தாபனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னமும் பெயரிடப்படவில்லையாம். தற்போது பாலாவின் அவன் இவனில் திருநங்கை வேடத்திலும், அதேநேரம் ஆக்ஷன் வேடத்திலும் நடித்து வருகிறார் விஷால். டிசம்பர் முதல் வாரத்தில் இவரது அவன் இவன் வேலைகள் முடிந்துவிடுகிறதாம்.
அதன் பிறகு டிசம்பர் 9ஆம் திகதி கொல்கத்தாவில் பிரபுதேவாவின் புதிய படத்துக்கான படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில் விசாலும் சமீராவும் அங்கு பிரசன்னமாகவுள்ளார்களாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 May 2025
20 May 2025