2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பிரபுதேவாவை அழிக்கச் சென்ற நயனிடம் விசாரணை...

Menaka Mookandi   / 2012 மே 07 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரபுதேவாவுடனான காதலின் உச்சியில், அவரது பெயரையே தனது கையில் பச்சைக்குத்திக் கொண்டவர் நடிகை நயன்தாரா. தற்போது, அவருடனான காதல் முறிவடைந்துள்ள நிலையில் தான் கையில் குத்தியுள்ள பச்சையை அழிப்பதற்கு படாதபாடு படுகிறாராம் நயன்தாரா.

இதற்காக பாங்கொக் சென்று திரும்பியதாக கூறப்படுகின்றது. தனது முயற்சி பயனளிக்காத நிலையில் சென்னை திரும்பிய நயன்தாராவிடம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் சுமார் 45 நிமிட நேர விசாரணையை நடத்தியுள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபுதேவாவுடனான காதல் முறிவடைந்துள்ள நிலையில், மீண்டும் தனது நடிப்புப் பணியை தொடங்கியுள்ளார் நயன்தாரா. தெலுங்குத் திரையுலகில் பிஷியாக உள்ள அவர், தமிழிலும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நயன்தாராவும் அவரது முகாமையாளர் மற்றும் மேக்கப் மேனுடன் பாங்காக் போயிருந்தார். அங்கு சென்று மீண்டும் சென்னை திரும்பிய அவர்களை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர் சுங்க அதிகாரிகள். நயன்தாராவின் பாங்கொக் பயணம் குறித்துத்தான் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .