2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தனுஷை வம்பிழுக்கும் சிம்பு...

Menaka Mookandi   / 2012 ஜூன் 07 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


'வாலு' திரைப்படத்தில் நடிகை ஹன்சிகா பேசும் ஒரு வசனத்தால் நடிகர்களான சிம்பு, தனுஷ் இடையே உள்ள மோதல் மேலும் வலுப்பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

சிம்புவுக்கும், தனுஷுக்கும் இடையில் பனிப்போர் நடைபெற்றுக்கொண்டுள்ளமை அனைவரும் அறிந்ததே. தனுஷுடன் சுள்ளானில் நடித்த சிந்து துலானியை சிம்பு தனது மன்மதன் திரைப்படத்தில் விலைமாதாக்கினார். சிம்புவுடனான காதல் முறிந்த பிறகு நயன்தாராவுடன் தனுஷ் யாரடி நீ மோகினியில் நடித்தார். தனுஷ் 'வைய் திஸ் கொலவெறி' பாட சிம்பு பதிலுக்கு ஒரு பாட்டை பாடி யூடியூப்பில் விட்டார்.

இவ்வாறானதொரு நிலையில், இவர்கள் சமாதானமாகவே மாட்டார்களா என்று கேட்டால் அது இப்போதைக்கு நடக்கும் விடயமாக தெரியவில்லை. இந்நிலையில் சிம்பு நடிக்கும் வாலு திரைப்படத்தில் அவரைப் பார்த்து ஹன்சிகா 'ஒரு சில பசங்கள பாக்க பாக்கத் தான் பிடிக்கும். ஆனா உன்ன மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிச்சிடும்' என்று வசனம் பேசியுள்ளாராம்.

படிக்காதவன் திரைப்படத்தில் தனுஷ் தன்னைப் பார்த்தாலே முகம் சுளிக்கும் தமன்னாவைப் பார்த்து என்ன மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிக்காது. பாக்கப் பாக்கத் தான் பிடிக்கும் என்று சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X