2025 மே 20, செவ்வாய்க்கிழமை

லட்சுமி ராயின் ரகளை...

Menaka Mookandi   / 2012 ஜூன் 08 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகை லட்சுமிராய்க்கு நீண்ட இடைவெளிக்குப் பின் விக்ரமுடன் 'தாண்டவம்' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் அனுஷ்காவும் இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருகிறது. லண்டனில் முக்கிய காட்சிகள் தற்போது படமாகி வருகின்றன. இதற்காக படக்குழுவினர் அங்கு முகாமிட்டு உள்ளனர். அங்குள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் லட்சுமி ராய்க்கு அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த அறை பிடிக்காமல் ஹோட்டலில் லட்சுமிராய் ரகளையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓட்டல் அறை வசதியாக இல்லை. அதில் தங்க மாட்டேன் என்று படக்குழுவினருடன் தகராறு செய்தாராம். படப்பிடிப்புக்கு செல்லவும் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதர நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் லட்சுமி ராய்க்காக பல மணி நேரம் காத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. இதனால் இயக்குனர் விஜய் தவித்துள்ளார்.

'ரூம்' பிடிக்காமல் லட்சுமிராய் தகராறு செய்யும் தகவல் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டது. உடனே லட்சுமி ராய்க்கு வேறு ரூம் மாற்றிக் கொடுக்க சொன்னாராம். புது ரூம் கிடைத்த பிறகே சமாதானமாகினாராம் லட்சுமிராய்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X