2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முறிந்தது அமலாவின் காதல்...

Menaka Mookandi   / 2012 ஜூன் 11 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


இயக்குநர் விஜய் மற்றும் நடிகை அமலா போல் ஆகியோருக்கு இடையில் மலர்ந்திருந்த காதல் தற்போது முறிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருவரும் அவர்களது பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாக அறிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர்களின் காதல் முறிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இயக்குனர் விஜயின் ஆஸ்தான நாயகி அமலா போல். திரைப்படங்களில் மட்டுமல்ல, விஜய் வீட்டு விசேடங்களிலும் அமலா போல்தான் முக்கியஸ்தர்.

அண்மையில், ஹைதராபாதில் நடைபெற்ற நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் திருமணத்துக்கு தனியாகவே கிளம்பிப் போய்விட்டாராம் அமலா. இத்தனைக்கும் அவர் விஜய் இயக்கும் தாண்டவம் படப்பிடிப்பில் இருந்த நிலையிலேயே விஜய்கு தெரிவிக்காமல் போயுள்ளாராம்.

இன்னொரு பக்கம் விஜய்க்கு அவர் வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார்களாம். அமலா பால் தெலுங்கு சினிமாவே கதி என்று கிடப்பதன் பின்னணி கூட, விஜய்யுடனான உறவு முறிவுதான் என்கிறார்கள்.




You May Also Like

  Comments - 0

  • mohan Sunday, 24 June 2012 04:54 AM

    உனக்கு ஒரு காதல் தேவைதானா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X