2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருநங்கையாக ஜெயம் ரவி...

Menaka Mookandi   / 2012 ஜூன் 24 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரவிஇ விளையாட்டுப் பிள்ளை அல்லது பணக்கார இளைஞனாக நடித்து வந்த நிலையில், 'பேராண்மை' திரைப்படத்தில் அதிரடி கதாபாத்திரத்தில் தனது நடிப்புத் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில்இ அமீர் இயக்கத்தில் 'ஆதிபகவன்' என்ற திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ரவி.

இதில் அவருக்கு இரட்டை வேடமாம். அதில் ஒரு கதாபாத்திரம் திருநங்கை கதாபாத்திரமாம்.

இந்நிலையில்இ 'ஆதிபகவன்' திரைப்படத்தில் நடிப்பில் தனது இன்னொரு பரிமாணத்தை காட்டப் போகிறார் ரவி என்றே கூற வேண்டும்.

இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நீத்து சந்திரா நடிக்கவுள்ளாராம்.

அமீர் தன் அடுத்த திரைப்படமான ஆதி பகவனை எப்போது வெளியில் தரிசனம் காட்டுவார் என்பது மில்லியன் டொலர் கேள்வியாக இருந்து வந்தது.

இப்போது அதற்கு விடைகிடைத்திருக்கிற நிலையிலேயே மேற்படி தகவல்கள் வெளியாகியுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X