2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஐயோ பாவம் நயன்தாரா...!

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 23 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


படப்பிடிப்பு நிலையத்துக்கு வந்தால் கலகலவென இருந்த நயன்தாரா இப்போது இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு அமைதிகாத்து வருகிறாராம். அவரைப் பார்ப்பவர்கள் 'ஐயோ பாவம் நயன்தாரா...!' என்று சொல்லும் அளவுக்கு மாறிப்போயுள்ளாராம் நயன்தாரா.

நயன்தாரா முன்பெல்லாம் படப்பிடிப்பு நிலையத்துக்கு வந்தால் நடிகர், நடிகைகள் முதல் லைட் மேன் வரை அனைவருடனும் தான் ஒரு ஹீரோயின் அதுவும் முன்னணி ஹீரோயின் என்ற கர்வமே இல்லாமல் கலகலப்பாக பேசுவாராம். ஆனால் தற்போது பிரபுதேவாவுடனான காதல் முறிந்ததையடுத்து இரண்டாவது அத்தியாயத்தை துவங்கியுள்ளார் நயன்.

காதலுக்கு முன்பு கலகலப்பாக இருந்த நயன், தற்போது யாருடனும் பேசாமல் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக உள்ளாராம். இதைப் பார்ப்பவர்கள் அய்யோ பாவம் நயன்தாராவை இந்த காதல் பிரிவு படுத்தும் பாட்டைப் பார்க்கவே பாவமாக உள்ளது என்கிறார்களாம்.

அவர் தற்போது விஷ்ணுவர்த்தனின் பெயரிடப்படாத படத்தில் அஜீத்துடன் நடித்து வருகிறார். அவர் மீண்டும் தமிழ், தெலுங்கு என்று பிஸியானாலும் தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளில் இருந்து அவர் முழுவதுமாக மீளாதது போன்றே தெரிகிறது. விரைவில் பழைய கலகலப்பான நயனைப் பார்க்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X