2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கதாநாயகியை உதைத்த தனுஷ்...

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 25 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப்படம் 'மரியான்'. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக 'பூ' திரைப்படத்தில் நடித்த மலையாள நடிகை பார்வதி நடிக்கிறார்.

பொதுவாக முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகள், அந்த நடிகர்களுடன் சகஜமாக பேசுவார்கள். ஆனால் பார்வதியோ தனுஷை பார்த்தால் ஒரு வணக்கம் கூட போடுவதுகிடையாதாம். டைரக்டர் பரத்பாலாவிடம் ரொம்ப ஒட்டி உறவாடுகிறாராம்.

இதனால் தனுஷ்க்கு ஒரு வருத்தமாம். இந்தநிலையில், ஒரு காட்சியில் பார்வதியை எட்டி உதைப்பது போன்று தனுஷை நடிக்க சொன்னபோது, நிஜமாகவே மொத்த பலத்தையும் ஒன்றுதிரட்டி பார்வதியை ஓங்கி உதைத்துவிட்டராம்.

இதனால் காலை பிடித்துக்கொண்டு, 'என்ற குருவாயூரப்பா' என்று அபய குரல் எழுப்பியபடி ஓவென்று அழுது விட்டாராம் பார்வதி. ஆனால் அதற்கு ஒரு மன்னிப்புகூட கேட்கவில்லையாம் சுள்ளான்.

இத்தனை நாளும் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை கொட்டித் தீர்த்து விட்ட உடனே படப்பிடிப்பு இடம்பெற்ற இடத்திலிருந்து தலைமறைவாகி விட்டாராம் தனுஷ்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X