2025 மே 19, திங்கட்கிழமை

சிம்பு - ஹன்சிகா திருமணத்துக்கு டி.ஆர் ஓகே...

Menaka Mookandi   / 2013 ஜூலை 14 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனது மகன் சிம்பு, நடிகை ஹன்சிகாவை திருமணம் செய்துகொண்டால் அதை ஏற்றுக்கொள்வேன் என்று இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஆவலாக உள்ளனர். பெண் பார்க்கும் படலம் எல்லாம் தீவிரமாக நடந்து வருகிறது என்று கூறப்பட்டது. வேலூரில் ஒரு பெண்ணை பார்த்து பிடித்துவிட்டதாகவெல்லாம் கூறினார்கள். அதன் பிறகு சிம்பு ஆன்மீகத்தில் குதித்துவிட்டார்.

சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் காதல் என்று யார் பத்தவச்சாங்களோ தெரியவில்லை. அதை சம்பந்தப்பட்டவர்களே மறுத்தாலும் மீண்டும் மீண்டும் ரவுண்டு வருகிறது.

தனக்கும் சிம்புவுக்கும் இடையே காதல் எல்லாம் இல்லை என்று ஹன்சிகா பலமுறை கதறிவிட்டார். ஆனாலும் அவர் பெயர் சிம்புவுடன் கிசுகிசுக்கப்படுகிறது. அவர்கள் இருவரும் வாலு திரைப்படத்தில் நடிக்கும் போது காதல் மலர்ந்தது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது மகன் சிம்பு யாரை காதலித்தால் அதை ஏற்றுக்கொள்வேன் என்று டி.ராஜேந்தர் கூறி வந்தார். இந்நிலையில் சிம்பு ஹன்சிகாவை திருமணம் செய்து கொண்டாலும் அதை தான் ஏற்றுக்கொள்வேன் என்று டி.ஆர். தெரிவித்துள்ளார்.

ஹன்சிகா தான் அய்யா சாமி ஆள விட்டுவிடுங்கள் என்று அழுகாத குறையாக சொல்கிறார் அல்லவா. பாவம், அவரை விட்டுவிடுங்களேன்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X