2025 மே 19, திங்கட்கிழமை

அவசரப்பட்டுட்டேன்: புலம்பும் ஹன்சிகா

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர் சிம்புவுடனான காதலை பகிரங்கமாக ஒப்புக் கொண்டதால் ஹன்சிகாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாம். ஹன்சிகாவுக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் என்று பலநாட்களாக பேசப்பட்டது.

முதலில் இதை மறுத்து வந்த ஹன்சிகா இறுதியில் ஆமாம் நான் சிம்புவை காதலிக்கிறேன், அவரை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஹன்சிகாவுக்கு புதிய பிரச்சனை எழுந்துள்ளது.

கோலிவூட்டின் நம்பர் 1 நடிகையாக இருக்கும் ஹன்சிகாவை தங்கள் திரைப்படங்களில் நடிக்க வைக்க அவரை தயாரிப்பாளர்கள் துரத்திக் கொண்டிருந்தனர். ஹன்சிகாவும் சந்தோஷமாக கால்ஷீட் கொடுத்து வந்தார்.

தனது காதலை அறிவித்த பிறகு சில தயாரிப்பாளர்கள் ஹன்சிகாவை தங்கள் திரைப்படங்களில் நடிக்க வைக்க விரும்பவில்லையாம். இதனால் அவர்கள் வேறு நடிகைகளை தேடிப் போகிறார்களாம்.

வாய்ப்புகள் குறைவதைப் பார்த்த ஹன்சிகா நான் இன்னும் 5 ஆண்டுகள் சினிமாவில் தாங்க இருப்பேன் என்று மைக் வைக்காத குறையாகக் கூறியும் யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்களாம்.

ஹன்சிகாவுக்கு பதில் நயன்தாரா, காஜல் அகர்வாலை தேடிச் செல்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். நயன், காஜல் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நஸ்ரியாவிடம் செல்கிறார்களாம். இப்படித்தான் ஹன்சிகாவுக்கு கிடைக்க வேண்டிய 2 திரைப்படங்கள் நஸ்ரியாவுக்கு சென்றுவிட்டனவாம்.

வாய்ப்புகள் பிற நடிகைகளுக்கு செல்வதைப் பார்த்து ஹன்சிகா கவலையில் உள்ளாராம். அவசரப்பட்டு காதலை அறிவித்து நமக்கு நாமே ஆப்பு வைத்துக்கொண்டோமோ என்று புலம்புகிறாராம்.

இதேவேளை, எதிர்வரும் 9ஆம் திகதி தனது 22ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள ஹன்ஸிகா, 23ஆவது குழந்தையை தத்தெடுக்கவுள்ளார். ஒவ்வொரு பிறந்தநாளிக் போதும் அவர் ஆதரவற்ற ஒரு குழந்தையை தத்தெத்து வளர்த்து வருகின்றார்.

இந்நிலையில் அவர், இதுவரையில் 22 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். இக்குழந்தைகள் மும்பையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X