2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கமலிடம் திருடிய ஆர்யா...

Menaka Mookandi   / 2014 ஜனவரி 07 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


முன்னொரு காலத்தில் பல்லாயிரக் கணக்கான ரசிகைகளின் காதல் இளவரசனாக விளங்கியவர் உலக நாயகன் கமல் ஹாஸன். 70, 80களில் கமலைப் பிடிக்காது என்று கூறிய ரசிகைகளே இல்லை எனலாம். அந்தளவுக்கு அனைவர் உள்ளங்களிலும் குடிகொண்டவர்.

ஆக்காலத்தில் கமல் எவ்வாறோ அவ்வாறே இன்றைய கால ரசிகைகள் மாத்திரமின்றி நடிகைகளின் மனங்களிலும் காதல் இளவரசனாக வளம் வருபவர் நடிகர் ஆர்யா.

திரையுலகைச் சேர்ந்த அனைத்து நடிகைகளையும் டார்லிங், சுவீட் ஹார்ட், ஹனி என்று பல்வேறு இனிப்பான செல்ல வார்த்தைகளைக் கூறி அழைத்து அவர்களிடமிருந்து செல்ல அடி வாங்குவதிலும் ஆர்யாவுக்கு நிகர் ஆர்யாவே தான் என்கின்றனர் அவரின் சக நடிகர் நண்பர்கள்.

இன்றைய திரையுலகில் பெண்களை வசீகரிக்கும் நடிகர் யார் என்று கேட்டால்... உடனே 'ஆர்யா' என்று பதிலளிக்கின்றனர் அவரின் நண்பர்களான விசால், ஜீவா, கார்த்தி, ரவி போன்றோர்.

ஆர்யாவின் இந்த தனித் திறன் தமிழ்த் திரையுலகிலுள்ள நீண்ட கால அனுபவம் பெற்ற முன்னணி கதாநாயகர்கள் கண்களிலும் பட்டுள்ளது. அதனால் தான் என்னவே, உலக நாயகன் கமல் ஹாஸனே, தனக்கென ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்டிருந்த 'காதல் இளவரசன்' என்ற பட்டத்தை ஆர்யாவுக்கு வாரி வழங்கியுள்ளார்.

ஆர்யா – நயன்தாரா ஜோடியாக நடித்த 'ராஜா ராணி' திரைப்படத்தின் 100ஆவது நாள் வெற்றி விழாவுக்கு உலக நாயகன் கமல் ஹாசனை அழைத்து இருந்தனர். இந்த விழாவில் கமலஹாசன் கலந்து கொண்டு பேசும்போது, 'காதல் இளவரசன் பட்டத்தை பல வருடங்களாக நான்தான் வைத்து இருந்தேன். அதை நான் ஆர்யாவுக்கு கொடுக்க விரும்புகிறேன். ஆர்யாதான் அடுத்த 'காதல் இளவரசன்'' என்று கூறியுள்ளார்.




  Comments - 0

  • supun Tuesday, 07 January 2014 11:03 AM

    இவரை கமலுடன் ஒப்பிடுவது கொஞ்சம் ஓவர்.... அவர் திறமை நடிப்புடன் கொஞ்சம் அழகுடன் பிரபல்யமானவா்.... இவர் அவ்வாறு இல்லை....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X