2025 மே 19, திங்கட்கிழமை

சிம்புவுக்கு காதல் தோல்வி!

Menaka Mookandi   / 2014 ஜனவரி 31 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடித்து வரும் திரைபடத்திற்கு 'இது நம்ம ஆளு' என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, சூரி நடித்து வரும் திரைப்படத்துக்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. சிம்புவிற்கு ஜோடி யார் என்பது குறித்து பெரிய விவாதம் நடைபெற்று வந்தது. நயன்தாரா தான் நாயகி என்று ட்விட்டர் தளத்தில் இயக்குநர் பாண்டிராஜ் அறிவிக்க, அன்று முதல் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு எகிறியது.

நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வந்தன. படப்பிடிப்பு தளத்தில் இருவருமே நண்பர்களாகவே வலம் வந்து இருக்கிறார்கள். தங்களுக்குள் எதுவுமே நடக்காதது போல் இருவருமே நடந்து கொண்டதை படக்குழு ஆச்சர்யத்தோடு பார்த்தது. சிம்புவுக்கு லவ் ஃபெயிலியர். அவருக்கு வீட்டுல பார்த்த பொண்ணு தான் நயன்தாரா. நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணத்துக்காக அஞ்சு, ஆறு மாசம் காத்திருக்காங்க. அப்போ ரெண்டு பேருக்கும் இடையில் பூக்கும் காதல் தான் கதை. காதல் தரும் எதிர்பார்ப்புகள், அதன் பிறகான ஏமாற்றங்கள், அது உண்டாக்கும் பிரச்சினைகள். இது தான் படத்தோட கதை.

இப்படத்தில் நயன்தாராவை நாயகி ஆக்குவதற்கு முன்பு, கதவைத் திற காதல் வரட்டும். அல்லது லவ்வுனா லவ்வு அப்படி ஒரு லவ்வு என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து இருக்கிறார் பாண்டிராஜ். நயன்தாராவை நாயகி ஆனவுடன் தற்போது. இது நம்ம ஆளு என பெயர் வைக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார். ஏனென்றால் படத்தில் நயன்தாராவைப் பார்க்கும் போது எல்லாம் இது நம்ம ஆளு சார் என்று கூறிக்கொண்டே இருப்பாராம். அது தான் தலைப்பிற்கு காரணமாம்.



கதிர்வேலன் காதலிக்கு யு!


உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா நடிக்கும் இது கதிர்வேலன் காதலி படத்துக்கு சென்சார் யு சான்று வழங்கியுள்ளது. காதலர் தின ஸ்பெஷலாக திரைக்கு வரும் இந்தப் படத்தில் உதயநிதி - நயன்தாராவுடன், முக்கிய வேடத்தில் சந்தானம் நடித்துள்ளார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. சுந்தரபாண்டியன் என்ற வெற்றிப் படம் தந்த எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தைப் போலவே இப்படத்திலும் உதயநிதிக்கு சமமான கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வழக்கம்போல் இப்படத்தின் பாடல்களும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் உதயநிதி தீவிர அனுமார் பக்தனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் சந்தானம் - உதயநிதி காமெடியை ரசித்து வாய்விட்டு சிரித்தார்களாம்.

தமிழ் சினிமா சென்டிமென்ட்படி இரண்டாவது திரைப்படம் ஜெயிப்பது மிக முக்கியம். சுந்தரபாண்டியன் படத்தின் வெற்றிக்குப் பிறகு எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கும் இரண்டாவது படம் இது. 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இரண்டாவது படம் இது, இருவருக்குமே இந்த படம் மிக மிக முக்கியம்.




சிம்பு பேச்சை மீறிய ஹன்சிகா!


ஆர்யா என்றாலே கிசுகிசுவுக்கு பஞ்சம் இருக்காது. ஆர்யாவின் அனைத்து லீலைகளையும் தமிழ் திரையுலகமே அறியும். சிம்புவுக்கு தெரியமல் இருக்குமா? ஆர்யாவுடன் சேட்டை படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஹன்சிகாவை பாதுகாப்பதற்கு படாதபாடு பட்டராம் சிம்பு. படப்பிடிப்பு முழுவதும் முடியும் வரை இருதலை கொள்ளி பாம்பையாக தவித்து கொண்டிருந்தாராம் சிம்பு. இதனை அடுத்து ஆர்யாவுடன் நடிக்கக் கூடாது என்று கண்டித்தாராம் சிம்பு. அப்பொழுது காதல் மயக்கத்தில் இருந்த ஹன்சிகா அதற்கு ஒப்புக்கொண்டாராம்.

தற்;போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடித்துக் கொண்டிருக்கும் மீகாமன் படத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஹன்சிகாவை அணுகிய போது கைவசம் தேதியில் என்று மறுத்து இருக்கிறார். இதனை ஏற்றுக்கொள்ளாத படக்குழு உங்களுக்கு எப்பொழுது நேரம் கிடைக்குமோ அப்போது படப்பிடிப்பு வைத்துக் கொள்ளலாம் என்று கூறினர். சிம்பு சத்தியத்தை மீற விரும்பாத ஹன்சிகா அந்த படத்தை தவிர்க்கும் பொருட்டு பெரிய தொகையை சம்பளமாக கேட்டாராம்.

ஆனால் அவர் நினைத்தது போல் நடக்கவில்லை. அவர் கேட்ட சம்பளத்தை தர சம்மதித்தனர் படக்குழு. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி காணப்பட்டார். இதற்கிடையில் நயன்தாராவுடன் நடிக்க கூடாது என்ற ஹன்சிகா வாங்கிய சத்தியத்தை மீறி தற்போது நயன்தாராவுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்பு ஹன்சிகா உறவில் தற்போது விரிசல் ஏற்பட்ட நிலையில் மீகாமன் படவாய்ப்பை ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் சிம்புவுக்கு சரியான நோஸ்கட் செய்துள்ளாராம் ஹன்சிகா.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X