2025 மே 19, திங்கட்கிழமை

ஓவியாவிடம் ஜாக்கிரதை...

Menaka Mookandi   / 2014 நவம்பர் 13 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


தொடர்ந்து கவர்ச்சியாக நடிக்க ஓவியா தயாராக இருந்தபோதும் கமர்சியல் திரைப்படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, கலகலப்பு திரைப்படத்தில் நடித்தபோது இருந்ததைவிட, தற்போது தனது உடம்பில் பூசினாற் போன்று சதை போட்டிருக்கிறார். கூடுதல் கவர்ச்சி காட்டவும் தயாராக இருக்கிறார்.

தன்னுடைய அதிரடி கிளாமர் தோற்ற அல்பத்தைக் கொண்டு கமர்சியல் டைரக்டர்களாக தேடிப்பிடித்து படவேட்டையை தொடங்கியிருக்கிறாராம் ஓவியா. தன்னுடைய கவர்ச்சியான திரைப்படங்களை ஹீரோக்களுக்கு அனுப்பிவரும் ஓவியா இப்போ எப்படி இருக்கேன் என்று கேட்கிறாராம்.

அதற்கு நாயகர்களோ, முதலில் 40 மார்க் போட்டோம். இப்போது 80 மார்க் போடுகின்றனராம் ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையோ தெரியவில்லை.

சரத்குமாருடன் சண்டமாருதம் படத்தில் பெண் பொலிஸாக நடித்தாலும் கவர்ச்சிக்கு கொஞ்சமும் குறைவைக்கவில்லையாம் ஓவியா. தமிழில் நடித்த எத்தனையோ நடிகைகள் காணாமல் போயிருக்கிறார்கள். நான் ரொம்ப லக்கி. நம்பர் 1 இடத்திற்கு எல்லாம் ஆசைப்படவில்லை என்கிறார்.

ரஜினியும், நயன்தாராவும்தான் ஓவியாவின் ஃபேவரைட்டாம். அவர்களின் டெடிகேஷன் பிடிக்கும் என்கிறார். ஓவியாவிற்கு பிடித்த உணவு பொங்கல், மெதுவடை, பூண்டு சட்னியாம். அதுவும் நெய் முந்திரியோடு பொங்கல் என்றால் ஒரு பிடி பிடிப்பாராம்.

நன்றாக பாடுவாராம் ஓவியா. பாத்ரூம் பாடகியாம். செல்போனில் ரகசியமாய் படம் பிடித்தால் பளார் என்று அறைந்துவிடுவாராம். ஜாக்கிரதை.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X