2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பழைய நண்பர்களை ஓரங்கட்டும் வடிவேலு

George   / 2015 மார்ச் 22 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் புயலில் சிக்கி தன் வாய் துடுக்கால் தனக்கு தானே ஆப்பு வைத்துகொண் வைகைப்புயல் வடிவேலு, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதுடன் தனது பழைய நண்பர்களை கழற்றி விட்டு, புதிய கூட்டணியுடன் இணைந்துள்ளார்.

அரசியல் புயலில் சிக்கிய பிறகு வடிவேலுவின் மார்க்கெட் முற்றாக சரிந்து விட்டது. ஆனபோதும், தெனாலிராமன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் தலைகாட்டிய வடிவேலு, தற்போது எலி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். 

இந்த திரைப்படத்தில் தனது நடிப்பின் சாயல் முன்பைபோல இருக்கக்கூடாது என்பதற்காக பழைய நகைச்சுவை கூட்டாளிகளில் கிங்காங்கை தவிர யாரையுமே அவர் அழைக்கவில்லை. முற்றிலும் புதிய நகைச்சுவையாளர்களுடன் நடித்து வருகிறார்.

அவருடன் தொடர்ந்து நடித்து வந்த சில காமெடியன்கள் மீண்டும் வடிவேலுவை சந்தித்து வாய்ப்பு தருமாறு வீடு தேடி சென்று கேட்டார்களாம். ஆனால், அவரோ, முன்பு நான் நகைச்சுவையாளன் வடிவேலுவாக இருந்தேன். அதனால் நீங்கள் எனக்கு தேவைப்பட்டீர்கள். ஆனால், இப்போது ஹீரோ வடிவேலுவாகி விட்டேன். அதனால் நீங்கள் எனக்கு தேவையில்லை. 

அதோடு, மீண்டும் உங்களுடன் இணைந்து நான் நடித்தால் ஹீரோவாக தெரியமாட்டேன். பழைய நகைச்சுவையாளனாகவே தெரிவேன். அதனால் எனது ஹீரோ இமேஜ்க்குத்தான் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லி அவர்களை துரத்தியடித்து விட்டாராம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .