2025 மே 19, திங்கட்கிழமை

ரஜினியின் புதிய நாயகி யார்?

George   / 2015 ஜூன் 02 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிங்கா திரைப்படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப் பின்னர், ரஜினியெல்லாம் இனிமேல் கதாநாயகனாக நடிப்பதை விட்டு விட்டு அமிதாப்பச்சனை போன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் நல்லது என்று கொலிவூட்டில் பலர் ஆரூடம் சொல்லி வந்தார்கள்.

அந்த நேரத்தில், ரஜினியும் லிங்கா பிரச்சினையில் இருந்ததால் அவரும் ரூட்டை மாற்றக்கூடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ, மெட்ராஸ் இயக்குநர் ரஞ்சித் சொன்ன கதையில் லயித்துப்போய், இந்த திரைப்படம் தனக்கு மட்டுமன்றி தனது இரசிகர்களுக்கும் வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் ஹீரோ கோதாவில் இறங்கத் தயாராகிக்கொண்டிருக்கிறார்.

மேலும், இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானபோது கதாநாயகி யார் என்பதை குறிப்பிடவில்லை என்பதால், அந்த நடிகையா? இந்த நடிகையா? என்று ஆளாலுக்கு பேசத் தொடங்கி விட்டார்கள். இந்த போட்டியில், நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் களமிறங்கியுள்ளார்கள். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X